Tuesday 22 January 2013

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், தொடக்கக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிகளுக்கு கடந்த ஆண்டுக்கான இறுதிகற்பிப்பு மானியம் (ஊதியம்) மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிட்டு வழங்கப்படும். அதன்படி 2012ம் ஆண்டிற்கான கணக்கிடும் பணி உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வருகிற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

இதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் வழங்குவது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணியாகும். இறுதி கற்பிப்பு மானி யம் கணக்கிடும்போது, ஆய்வு செய்யப்படும் பள்ளி வேலை நாட்கள் 220 பூர்த்தி செய்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தலைமையாசிரியர் 5 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி முழு நிதியுதவியுடன் கூடிய முழுமை பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 100 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைத்தொழில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 2010 ஆக.23க்கு பிறகு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்களுக்கே மானியம் விடுவித்தல் வேண்டும். 

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் தற்காலிக பட்டச்சான்றின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், 2 ஆண்டுக்குள் அசல் பட்டச்சான்றினை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஊதியம் குறித்து மாநிலக் கணக்காயரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநிலக் கணக்காயர் மற்றும் துறை அதிகாரிகள் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் இறுதி கற்பிப்பு மானியத்தை பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தொடர் அங்கீகாரம் ஆணை பெற்ற பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். சுயநிலைப்பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது. பள்ளி செயலர் நியமனங்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மட்டும் மானியம் கணக்கிடுதல் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday 16 January 2013

Income tax slab for 2012-13

Income tax slab for  2012-13


The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2012-13 and assessment year (AY) 2013-14 are mentioned below:



New Income tax slab for fy 2012-13 / ay 2013-14
முதல் பிரிவு (பொது)
S. No.
Income Range
Tax percentage
1
Up to Rs 2,00,000
No tax / exempt
2
2,00,001 to 5,00,000
10%
3
5,00,001 to 10,00,000
20%
4
Above 10,00,000
30%
2வது பிரிவு (60 வயதிற்கு உட்பட பெண்கள்)
S. No.
Income Range
Tax percentage
1
Up to Rs 2,00,000
No tax / exempt
2
2,00,001 to 5,00,000
10%
3
5,00,001 to 10,00,000
20%

Above 10,00,000
30%
3வது பிரிவு (60 முதல் 80 வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்கள்)
1
Up to Rs 2,50,000
No tax / exempt
2
2,50,001 to 5,00,000
10%
3
5,00,001 to 10,00,000
20%

Above 10,00,000
30%
4வது பிரிவு (80 வயதை கடந்த மிக மூத்த குடிமக்கள்)
1
Up to Rs 5,00,000
No tax / exempt
2
5,00,001 to 10,00,000
20%
3
Above 10,00,000
30%

For normal category the simple calculation is as follows
Taxable Income in 10% slab maximum tax will be Rs 30000
Taxable Income in 20% slab maximum tax will be Rs 30000 + Rs 1,00,000 total Rs 1,30,000
Taxable Income in 30% slab minimum tax will be Rs Rs 1,30,000

பள்ளி, கல்லூரிகள் முன் போலீஸாரின் சுவரொட்டிகள்: மாணவியருக்கு அறிவுரை

பள்ளி செல்லும் மாணவியர் செய்ய வேண்டிய, செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸார் 
 

தென் கிழக்குத் தில்லியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளின் முன்பாக ஒட்டியுள்ளனர்.தில்லியில் கடந்த மாதம்,ஓடும் பஸ்ஸில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.


இந்த சுவரொட்டிகளில் மாணவியருக்கு போலீஸார் தெரிவித்துள்ள அறிவுரை வாசகங்கள் விவரம்:

பள்ளி முடிந்ததும் நேரமாக வீட்டுக்குச் செல்லுங்கள், முன்பின் தெரியாத நபர்கள் பேச்சுக் கொடுத்தால் அதைத் தவிர்த்து விடுங்கள். உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், பரிசுப் பொருள்கள் கொடுத்தால் அதை வாங்கக்கூடாது.முன்பின் தெரியாத நபர்களின் வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டாம். வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட காகிதத்தைப் பையில் வைத்திருங்கள். வெளியே நண்பரின் இருப்பிடங்களுக்குச் செல்வதாக இருந்தால் பெற்றோரிடம் தகவல் தெரிவியுங்கள்.கேலி, கிண்டல் செய்யும் நபர்களாக இருந்தாலும், சந்தேகப்படும்படியான நபர்களாக இருந்தாலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தயக்கமின்றி தகவல் தெரிவியுங்கள்.ஆசிரியர் அனுமதி இல்லாமல் பள்ளி வளாகத்தை விட்டுச் செல்லாதீர்கள்'' என அந்த சுவரொட்டியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான  அகவிலைப்படி 8% முதல் 9% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2013 முதல் உயர்த்தக்கூடும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும்.  அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு 8%க்கு குறைய வாய்ப்பில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஜனவரி 2013ல் குறைந்தபட்சம் அகவிலைப்படி 80% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு 2013 பிப்ரவரி இறுதியிலோ மார்ச் தொடக்கத்திலோ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.