Wednesday 17 April 2013

தமிழ்நாடு அரசு ஊழியா் - ஆசிாியா் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFETO) மாலை நேர தா்ணா

        தமிழ்நாடு அரசு ஊழியா் - ஆசிாியா் சங்கங்களின்  கூட்டமைப்பு (TANFETO)  சாா்பாக 17.04.2013 அன்று வட்டார தலைநகரங்களில் 4 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி  கவன ஈா்ப்பு மாலை நேர தா்ணா  நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

          அதன்படி குழித்துறை சந்திப்பில் வைத்து   மாலை நேர தா்ணா நடைபெற்றது. TNPTF மாநில துணைப் பொதுச்செயலாளா் திரு.சி.பாலச்சந்தா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.பல்வேறு தோழமை சங்க நிா்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.

Wednesday 3 April 2013

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்

உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

                இதன்படி, அனைத்து பதிவுகளையும் நாளது தேதி வரை ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி இயக்குனர் மற்றும் மேல்நிலை அலுவலர்களின் சொந்த மாவட் டம், தற்போது பணி புரியும் இடம், அதற்கு முந்தைய பணியிடம் ஆகியவை கொண்ட குறிப் பிட்ட விவரங்களை உள்ளடக்கிய மின்குறிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவரங்களை மேம்படுத்தி 2013,14 ம் ஆண்டில் பணி விவரங்கள், தகுதி காண் பருவம் முடித்தது, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விவரம், ஜிபிஎப் விவரங்கள், நிலுவையில் உள்ள, முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், போன்ற விவரங்களையும் பதிவு செய்யப்படும். பின்னர், மாவட்ட வாரியாக குறியீட்டு எண், பாஸ்வேர்டு அளித்து, கண்காணிக்கவும், பணியாளர்கள் தாமதமின்றி தகுதிப்பயன்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

"ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

முதுநிலை ஆசிரியை (ஆங்கிலம்) பணிக்கு, ஜெகதீஸ்வரி என்பவர் விண்ணப்பித்து இருந்தார். இவர், 2001ம் ஆண்டு, பி.எஸ்சி., (இயற்பியல்), 2003ம் ஆண்டு எம்.ஏ., (ஆங்கிலம், 2009-10ம் ஆண்டில், பி.எட்., படிப்பு, 2011ம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் பி.ஏ., (ஆங்கிலம்) படித்தார். பி.எட்., படிக்கும் போது, பி.ஏ., ஆங்கிலப் படிப்பும் படித்து, இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார். 
எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெற்றதால், சென்னை பல்கலைக்கு, இந்தப் பிரச்சனையை, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியது. ஒரே ஆண்டில், பி.எட்., மற்றும் பி.ஏ., பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அதற்கு பல்கலையின் அங்கீகாரம் இல்லை என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, "முதுநிலை ஆசிரியை பணிக்கு, ஜெகதீஸ்வரிக்கு தகுதியில்லை" என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. 
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஜெகதீஸ்வரி மனுத் தாக்கல் செய்தார். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தன்னைத் தேர்ந்தெடுத்து, நியமிக்க வேண்டும் என, கோரியிருந்தார். இந்த மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் பி.எஸ்.சிவசண்முகசுந்தரம் ஆஜரானார். 
மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: வெவ்வேறு பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட தகுதி, தரத்தை நிர்ணயிக்க, பணி வழங்குபவருக்கு உரிமை உள்ளது. பல்கலைக்கழகங்கள், வெவ்வேறு விதமான படிப்புகளை, ஓட்டல்களில் வழங்கப்படும் "பஃபே" உணவு வகைகள் போல் வழங்குகிறது. இத்தகைய படிப்புகளுக்கு, பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் வழங்குகிறது. 
வரிசைப்படி தான் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மதிய உணவின் போதோ, டின்னரின் போதோ, சில ஒழுங்குமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. உணவிற்கு முன், ஆரம்பமாக "ஜூஸ்" அல்லது "சூப்" சாப்பிடுகிறோம். பின், உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு, இறுதியில் பழங்கள் சாப்பிடுகிறோம். உணவு முறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை, யாரும் கடைசியில் துவங்கி, முன் நோக்கி செல்வதில்லை.
கல்வி துறையில், ஒருவர் விரும்பும் எந்தத் துறையிலும், வெவ்வேறு வகையான படிப்புகளை, அவர் விரும்பும் வரிசையில் படிக்க, பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கிறது. ஒரே நேரத்தில், 2 குதிரைகளில் சவாரி செய்ய அனுமதிக்கிறது. இதனால், கல்வியின் தரம் தான் பாதிக்கப்படுகிறது. இத்தகைய ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்த முடிவை, அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு முடிவு தன்னிச்சையாக இருந்தாலோ, சட்ட விரோதமாக இருந்தாலோ, அரசியல் அமைப்பு உரிமையை மீறியதாக இருந்தாலோ ஒழிய, மனுதாரர் கோரியபடி, உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, "ஒரே நேரத்தில் வெவ்வேறு பட்டப்படிப்புகளை படித்தவர்களின், விண்ணப்பங்களை ஏற்கக் கூடாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்த நிலைப்பாடு சரியானது தான். அதில், குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2013 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.