Tuesday 1 October 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்1, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்&2ஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான கீ ஆன்சரைகடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், டி.ஆர்.பி. வெளியிட்ட கீ ஆன்சரில்ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும், சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும், தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும், புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது. 

ஆனால், தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன், அக்டோபர் முதல்வாரத்தில், தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு

கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம் வருமாறு...
1. பிஎட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பிஎட் ., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.

2. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

3. பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.

4. முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.

5. தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப்பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

Saturday 28 September 2013

அக். 3 : சர்வதேச போராட்ட தினம்

உலக தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வோராண்டும் அக்டோபர் 3 ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உலகில் உள்ள உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்திருக்கிறது
.கடந்த மூன்றாண்டு காலமாக உலகத் தொழிற்சங்க சம்மேளனம் சர்வதேச போராட்ட தினத்தைக் கொண்டாடி வருகிறது. 2009 ஏப்ரல் 1 அன்று சுரண்டலுக்கு எதி ராக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்ற முழக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.2010இல் செப்டம்பர் 7 அன்று இந்நாள் அனுசரிக்கப்பட்டது. முதலாளித்துவ உலகம் ஆழமான நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித் துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘இந் நெருக்கடிக்கு நாம் உதவிட முடியாது’’ என்ற முழக்கம் அன்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

மிக வும் கடினமாகப் போராடி ஈட்டிய உரிமை களைப் பாதுகாத்திடுவோம் என்றும் முழக்க மிடப்பட்டது.இந்தியாவில், ஆட்சியாளர்களின் கொள் கை களை மாற்றக் கோரியும், உழைக்கும் மக்க ளின் அத்தியாவசியக் கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய அளவில் மத்தி யத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம் மேளனங்கள் இணைந்து நடத்திய நாடு தழு விய அளவிலான வேலை நிறுத்தமும் அனு சரிக்கப்பட்டதும், அதே நாளில் தற்செயலாக நடந்தது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் 16 ஆவது மாநாடு, 2011 ஏப்ரலில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட் டின் போதுதான் உலகத் தொழிற்சங்க சம் மேளனத்தின் அமைப்பு தினமான அக்டோபர் 3 அன்று சர்வதேச போராட்ட தினம் அனு சரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிற்சங்க சம்மேளனம் 1945 அக்டோபர் 3 - 8 தேதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது.

உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வரலாற்றின் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கேற்ப வர்க்கரீதியாக அமைந்த சர்வதேச தொழிற்சங்கமாக இன்றளவும் தொடர்கிறது. 16ஆவது மாநாட்டின் அடிப்படையில், 2011 அக்டோபர் 3, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, கூட்டு பேர உரிமைகளை உத்தர வாதப்படுத்துதல், தொழிற்சங்க மற்றும் ஜன நாயக உரிமைகளை வழங்குதல், வாரத்தில் ஐந்து நாட்களுடன் 35 மணி நேர வேலை, சிறந்த ஊதியம் ஆகிய கோரிக்கை சாசனங் களுடன் அனுசரிக்கப்பட்டது.2012ஆம் ஆண்டு இந்நாள் உலகம் முழு வதும் உண்ண உணவு, குடிதண்ணீர், சுகா தாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனுசரிக்கப் பட்டது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் இக்கோரிக்கைகளை இறுதிப்படுத்துகையில், தொழிற்சங்கங்கள் மனிதகுலத்தின் இந்த அடிப்படைக் கோரிக் கைகளை எழுப்பிட வேண்டும் என்று குறிப் பிட்டது. உலகில் உள்ள பன்னாட்டு நிறுவனங் கள் பல நாடுகளிலும் உள்ள இயற்கைச் செல் வங்களை சூறையாடிச் செல்வதை அடுத்து இவ்வாறு கோரிக்கைகளை உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வடிவமைத்தது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் இயற் கைச் செல்வங்களைச் சூறையாடிச் செல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விதத்தில் இக்கோரிக்கைகளின் மீதான பிரச்சாரங்கள் நடைபெற வேண்டும் என்றும் உலகத் தொழிற் சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.2013இல் இயக்க தினம்உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் 2012ஆம் ஆண்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சமயத்தில், நாம் இந்த அடிப்படைக் கோரிக்கைகளின் மீதான பிரச்சாரத்தைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது.

மனிதகுலம் உயிர்வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்போது மறுக்கப் பட்டிருக்கின்றன. எந்த விதத்திலாவது கொள் ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற சுரண் டும் கூட்டத்தினரின் வேட்கையானது, இயற் கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும், மக்களை இரக்கமின்றி சுரண்டுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.எனவே, இந்த ஆண்டும் உணவு, தண் ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி முதலியவற்றிற்கான கோரிக்கைகளின் அடிப்படையில் நம் போராட்டங்கள் தொடரும். 85 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஊட்டச் சத்துக்குறைவால் பட்டினி கிடந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் பன் னாட்டு நிறுவனங்கள் உலகின் ஒட்டுமொத்த உணவுத் துறையையும் தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கூட நம் வேளாண் துறையா னது கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டுமென்கிற கோரிக் கையை ஏற்க மறுப்பதன் மூலமாக உணவுப் பாதுகாப்பு என்பதும் காலங்கடத்துவதற்கான பசப்பு வார்த்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவு, எடை குறை வாயிருக்கும் குழந்தைகள், ரத்தச்சோகை, மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு குழந் தைகள் ஆளாகியிருத்தல் ஆகிய அனைத்திற் கும் முறையான உணவு அவர்கள் உட்கொள் ளாததே காரணங்களாகும். உலகில் குழந்தை கள் அதிகம் உள்ள நாடு நம் நாடுதான். இதில் 40 விழுக்காட்டுக் குழந்தைகள் போதிய ஊட் டச்சத்தின்றி வாடி வதங்கிக் கொண்டிருக் கின்றன.நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான அளவிற்கு உணவு நெருக்கடியால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் வறுமை குறைந்துவிட்டதாக மிகவும் நகைக்கத்தக்க விதத்தில் ஆட்சியாளர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த போதிலும் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் தரமான, பாதுகாப்பான, மலிவான விலையில் உணவுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உலகத் தொழிற் சங்க சம்மேளனம் கோருகிறது. இந்தியாவில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி/கோதுமை கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதத்திற்கு 35 கிலோ கிராம் அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலமாக வழங் கப்பட வேண்டும் என்பதை நாம் கோரிக்கை யாக வைத்திருக்கிறோம்.தண்ணீர்மூன்றாம் உலகப் போருக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தண்ணீர் தற்போது சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுத்த மான தண்ணீருக்கான உரிமை அடிப்படை உரிமையாகும். ஆயினும் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் இது இன்றளவும் கன வாகவே நீடிக்கிறது.சர்வதேச அளவில், தண்ணீர் என்பது பன் னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய வர்த்தக மாக மாறியிருக்கிறது. உலகில் ஐந்து வயதுக் குக் குறைவாகவுள்ள 15 லட்சம் குழந்தைகள் போதிய அளவு பாதுகாப்பான குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததன் காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மக்களுக்கு நாள்தோறும் கிடைக்க வேண் டிய அடிப்படைத் தேவை தண்ணீர் என் பதையும், பாசனத்திற்கும் தண்ணீர் அவசியம் தேவை என்பதையும் ஆட்சியாளர்கள் அடி யோடு மறந்து விட்டு, மத்திய அரசு தன்னு டைய தண்ணீர்க் கொள்கையையும் அனைத்து நீர்வள ஆதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கக் கூடிய விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உல கில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்கப்படுவது உத்தரவாத மாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. கல்விஅனைவருக்கும் கல்வி என்பது உலகளா விய கோரிக்கையாகும். பல நாடுகளில் நவீன தாராளமயக் கொள்கைகள் ஆதிக்கம் செலுத் தக்கூடிய நிலையில், கல்வி என்பது மிகவும் லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. அரசாங்கம் கல்வி அளிக்க வேண்டும் என்பது அநேகமாக கைவிடப் பட்டு வருகிறது. கல்வித்துறையில் நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருப்பதை அடுத்து, இளைஞர்கள் கல்வி கற்பதற்கான தங்கள் அடிப்படை உரி மைகள் மறுக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கல்வி முறை அனைத்து அம்சங்களிலும் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. இது மாணவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. மத்திய அரசும் அடிப் படைக் கல்வியை ஓர் அடிப்படை உரிமை யாக்கி இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால். முறையான உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாமல், போதிய அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், கல்வி அமைப்பு முறையும் கூட வர்க்க அடிப் படையில் பிளவுபட்டு நிற்கிறது. வசதி படைத்த ஒரு சிறிய அளவிலான கூட்டம் மட்டுமே பணத்தை வாரி இறைத்து தாங்கள் விரும்பும் கல்வியைப் பெறுவதை உத்தர வாதப்படுத்திக் கொண்டுள்ளது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த் தெடுப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் கல்வி முறை அமைந்திட வேண் டும். இதற்கு, முன்பு குறிப்பிட்டிருப்பதைப் போல, ஆரம்ப நிலையிலிருந்து உயர் நிலை வரை நாட்டின் கல்விக் கொள்கையில் முழு மையாக மாற்றம் செய்யப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வி என்கிற நம் பிரச்சாரம் தொடர வேண்டும்.சுகாதாரம்சுகாதாரம் அளிக்கப்படுவது என்பது வர்த் தகமல்ல என்று கூறப்பட்டாலும்கூட, இந்திய மற்றும் பன்னாட்டு வர்த்தகக் கார்ப்பரேட்டு களின் கைகளில் அது ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக மாறி இருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு என்பது பிரதானமாகத் தனியார் துறையிடம் சென்றுவிட்டது. பொதுவாக மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் மிகப் பெரிய தொகையை இதற்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டிருக் கிறார்கள். சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்கங் களின் சாதனைகளில் முதன்மையான இடத்தை வகிக்கக்கூடியது. அது இன்றைய தினம் கைகழுவப்பட்டுக் கொண்டிருக் கிறது. உயிர்காக்கும் மருந்துகள் கூட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற் குள் முழுமையாகச் சென்றுவிட்டன. இந்தியா வில் மேற்கொள்ளப்படும் மருந்து உற்பத்தி எதுவாக இருந்தாலும் அது பன்னாட்டு பகாசுர கம்பெனிகளால் விழுங்கப்பட்டு விடுகின்றன. அரசுத்தரப்பில் அடிக்கடித் தம்பட்டம் அடிக்கப்படும் மருந்து விலைக் கட்டுப்பாடு, சுகாதார மிஷன் போன்றவை அரசாங்கத் தரப்பில் கூறப்படுவதுபோல் எந்தப் பாதிப்பை யும் ஏற்படுத்திட வில்லை.சுகாதாரப் பாதுகாப்பு என்பது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் கோரிக்கையாகும். அவ்வாறு செய்யப்படு வதன் மூலமாகத்தான் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போதும் சரி, ஓய்வுபெற்ற பின்னரும் சரி ஒரு சுகாதாரமான வாழ்க்கைக் கான அனைத்து அம்சங்களையும் உத்தர வாதப்படுத்திட முடியும்.வீட்டுவசதி வீட்டுமனைகளின் விலைகள் விண் ணை நோக்கி சென்றுகொண்டிருக்கக்கூடிய நிலையில், நாட்டில் நகரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், வீட்டு வசதி என்பது நாட்டு மக்களை எதிர்நோக்கி இருக் கக்கூடிய மிக ஆழமான பிரச்சனையாக மாறி இருக்கிறது.

பாதுகாப்பான, வசிக்கத்தக்க மற் றும் மக்களால் வாங்கத்தக்க அளவிற்கான இல்லம் என்பதும் அவ்வாறு வாங்கப்படும் இல்லம் ஒருவர் அமைதியாகவும் கண்ணியத் துடனும் வாழ்வதற்கு உகந்ததாக அமையக் கூடிய விதத்திலும், எவராலும் வலுக்கட்டாய மாக வெளியேற்றப்பட முடியாத நிலையிலும் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தினால் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கையாகும். நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் மிக வும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் குடி சைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் பகுதியினர் வீடற்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வீட்டுவசதிக்கான நம்முடைய பிரச்சாரமும் போராட்டமும் நம் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.உலகத் தொழிற்சங்க சம்மேளனம் எழுப்பி யிருக்கின்ற இவ்வனைத்துக் கோரிக்கை களையும் முன்வைத்து, இதனுடன் இணைந் துள்ள 126 நாடுகளைச் சேர்ந்த 8 கோடியே 40 லட்சம் உறுப்பினர்கள் அக்டோபர் 3 அன்று உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் இறங்கிட இருக் கிறார்கள். இந்தியாவிலும், உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்துள்ள அத் துணை அமைப்புகளும் அன்றைய தினம் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடவுள்ளார்கள்.இவ்வியக்கத்தில் நம் சங்கத்தின் சார் பிலும் மிகப் பெரிய அளவில் பங்கேற்போம். நம் முடைய அடிப்படைக் கோரிக்கைகளாகவும் விளங்கிடும் இக்கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். மக்களுக்கு ஒரு நாகரிகமான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்துவதற்கான போராட்டத்திற்காக அவர் களையும் அணிதிரட்டிடுவோம்.

Thursday 26 September 2013

ஏழவது சம்பள கமிஷன் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு கிடையாது: தமிழக அரசு

           ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, தெரிவித்துள்ளது.வழக்கறிஞர் பழனிமுத்து என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கூறியுள்ளதாவது:"ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் ஆந்திரா, ஒடிசாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான பாகுபாடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோர் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Sunday 22 September 2013

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி. முடிவு செய்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881  முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், டி.ஆர்.பி. போட்டித் தேர்வை நடத்தியது. 1.5  லட்சம் பேர், தேர்வு எழுதினர். இதன் முடிவு, இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 52  கேள்விகளில், எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும்  இதனால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், ஐகோர்ட், மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, டி.ஆர்.பி.  க்கு  கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால் கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை எனினும், அந்த கேள்விகளை நீக்கிவிட்டு  மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு  மதிப்பெண் வழங்கலாம்  என்ற  டி.ஆர்.பி.  யின் கருத்தை  கோர்ட் ஏற்கவில்லை.  " பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன் ? இதற்கு டி.ஆர்.பி. , தான் பொறுப்பு' என்று  கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான  அச்சகத்தின் மீது டி.ஆர்.பி.  கடும் கோபத்தில் உள்ளது. 

இதுகுறித்து  டி.ஆர்.பி. வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான்  கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ்" என  கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில்  கேள்வித்தாள்கள் தவிர  வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு  பின்  " ஏ.பி.சி.டி. என  நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் " பி ' வகை கேள்வித்தாளில் தான்  எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் "பான்ட்" கோளாறு ஏற்பட்டதால்  எழுத்துப்பிழை ஏற்பட்டதாக  அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன்  அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் கேள்விகளை சரிபார்ப்பர்; அச்சடிக்கப்பட்டபின்  சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு  அச்சகம் தான் காரணம். இதற்காக  சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில்" தொகையில்  25 சதவீதம் வரை  அபராதம் விதிப்பது  அந்த அச்சகத்தை  கறுப்பு பட்டியலில்  சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு  டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறிபோகும் : மக்களவையில் சிபிஎம் தலைவர் எச்சரிக்கை

ஒருவர் ஓய்வுபெறும்போது, தான் இவ் வளவுதான் ஓய்வூதியம் பெறப்போகிறோம் என்று சொல்லமுடியாத அளவில் உள்ள ஓர் ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு தேவையா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் புதனன்று ஓய்வூதிய சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பாசுதேவ் ஆச்சார்யா பேசியதாவது:

ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சி உறுதியாக எதிர்க்கிறது. 2004 ஜனவரி 1 முதல் இதனை ஐ.மு.கூட்டணி அரசு அமல் படுத்தி வருகிறது. அதனைச் சட்டரீதியாக மாற்று வதற்காக இச்சட்டமுன்வடிவினை இப்போது கொண்டு வந்திருக்கிறது. இதற்காக ஓர் ஆணை யம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர், மேலும் சில கடினமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த புதிய ஓய்வூதிய முறை யாகும்.

நம்முடைய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமெரிக்க அரசாங்கத்தின் கட்ட ளைப்படிதான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓய்வூதிய நிதியச் சட்டமுன்வடிவும் அதன் கட் டளைப்படிதான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவ்வாறு இதனை மாற்றவேண்டும் என்று அமெரிக்காவும், உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏன் துடிக்கின்றன? பழைய ஓய்வூதிய அமைப்பு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் என்பது ஒன்றும் கருணைத் தொகை அல்ல. நாம் சுதந்திரம் பெற்றபின் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு ஊதியக்குழுக்களைப் பார்த்து விட்டோம். இந்த ஆறு ஊதியக்குழுக்களுமே ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் மற்றும் தொழி லாளர்களின் பிரிக்கமுடியாத உரிமை என்று ஒரே சீராகப் பரிந்துரைத்திருக்கின்றன.

எனவே. இது அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை அல்ல. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர்களுக்கு உறுதியானமுறையில், பயன் பாடுகள் அளிக்கப்படவில்லை. ஊழியர்களின் சேமிப்பு பங்குச் சந்தையில் போடப்படவிருக் கின்றன. அது என்னாகும்? இது தொடர்பாக எந்த உறுதிமொழியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வில்லை. புதிய ஓய்வூதியச் சட்டத்தில் பாஜக திருப்தி கொண்டிருப்பது எப்படி? என்று எனக்குத் தெரியவில்லை. தொழிலாளர்களின் தொகை பங்குச்சந்தை யில் போடப்பட்டு, அதில் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற் பட்டால், ஊழியர்களுக்கு எந்தத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்படி உள்ள ஒரு சட்ட முன்வடிவை எப்படி பாஜகவினர் ஆதரிக் கிறார்கள்? மேலும் பொருளாதாரத்தில் பண வீக்கத்தின் அழுத்தத்திற்கு ஏற்ப ஊழியர்கள் பெறும் உண்மை ஓய்வூதியத்தின் மதிப்பும் குறையும். பல நிறுவனங்கள் ஆசைகாட்டி ஊழியர்களை மோசம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குறிப்பாக நான்காம் நிலை ஊழியர்கள் ஏமாற்றப்படுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி 10 விழுக் காடு ஊதியம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இவ்வாறு 2004 ஜனவரி 1லிருந்தே பிடித்தம் தொடங்கிவிட்டது. இதே அளவு தொகையை அரசும் செலுத்த வேண்டும். இவ்விரண்டு தொகையை வைத்து ஒரு நிதியம் உருவாக்கப்படுகிறது. இதனை நிதிய மேலாளர் எனப்படும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்கள். ஒரேயொரு மேலாளரைத் தவிர மற்ற அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். மாபெரும் தொகை இவர்களிடம் தூக்கிக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதன் பொருள், அரசாங்கத்தின் பணம், தனியார் நலன்களுக்காகப் பயன்படுத்தப் பட விருக்கிறது என்பதே. புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப் படுவதன் மூலம் இருவித ஊழியர்களும் உரு வாக்கப்பட விருக்கிறார்கள். ஒரு பகுதியினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உத்தர வாதமான வருமானத்தைப் பெறுவார்கள். புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் மாதந்தோறும் பத்து விழுக்காடு சம்பளத்தைத் தரும் ஊழியர்கள். ஆனால், இவர்கள் ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசாங்கத்தால் இவர்களுக்குச் சொல்ல முடியாது.

ஐ.மு.கூட்டணி 1 அரசாங்கக் காலத்தில் இக்கேள்வி யைப் பலமுறை நான் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டேன். அவர்களின் தொகை சந்தை நிலவரத்தைச் சார்ந்திருக்கும் என்பதால் ஓய்வூதியம் எவ்வளவு பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை என்று பதிலளித்தார். சந்தை திவாலாகிப்போனால், ஊழியர்கள் அனைத்தையும் இழந்து விடுவார்கள். இவ்வளவு மோசமான சட்டத்தை நாம் ஏன் கொண்டுவர வேண்டும்? நாட்டில் ஒரு கோடிக் கும் மேல் ஊழியர்கள் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும், வங்கி மற்றும் இதர நிறுவனங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இவர்களின் எதிர்கால வாழ்வை ஏன் கேள்விக்குறியாக்குகிறீர்கள்? இது அரசிய லமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவிற்கு எதிரான தாகும்.

யாருடைய கட்டளைப்படி, யாருடைய நோக்கம் நிறைவேறுவதற்காக இதனைக் கொண்டுவருகிறீர்கள்? இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். அந்த ஒன்று என்ன? அதுதான் மிகவும் முக்கியமான பரிந்துரையாகும். நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில், ‘‘சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெறுவதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் ஒரு ஏற்பாட்டை அரசு உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் இதர ஓய்வூதியதாரர்களுக்கு எதிராக எந்தவிதமான பாதகமும் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிலைக்குழு விரும்புகிறது’’ என்று கூறியிருந்தது. மற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய ஓய் வூதியதாரர்களுக்கும் இடையே பாகுபாடு இல் லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைக்குழு கோரியிருந்தது. இந்த பரிந்துரை யைத்தான் அரசு கண்டுகொள்ளவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வர லாற்றுச் சிறப்புமிக்க இரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாட்டிலுள்ள 11 மத்திய தொழிற்சங் கங்கள் இணைந்து கடந்த பிப்ரவரி 20, 21 தேதி களில் நடைபெற்ற மேற்படி வேலைநிறுத்தத் திற்கான அறைகூவலை விடுத்தன. ஐஎன்டியுசி முதல் பிஎம்எஸ் உட்பட அனைத்துத் தொழிற் சங்கங்களும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. ‘‘அரசாங்கம் புதிய ஓய்வூதியத்திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது பெரும்பகுதி ஊழியர்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறது. இது, ஓய்வூதியப்பயன்களைப் பெறுவதை ஊழியர்களிடமிருந்து பறித்துவிடு கிறது’’ என்று கூறித்தான் இவ்வேலை நிறுத்தம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் சட்டமானால், அடுத்த 34 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளி யேறும் பணத்தின் மதிப்பு தற்போதுள்ள 14 ஆயி ரத்து 284 கோடி ரூபாயிலிருந்து 57 ஆயிரத்து 088 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது நாட்டிலுள்ள ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரா னது. எனவே அரசு, வழக்கத்திலிருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஓய்வூதிய தாரர் இறந்தால் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடை யாது. பணிக்கொடைக்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. எனவே இச்சட்டமுன்வடிவை நாங்கள் உறுதிபட எதிர்க்கிறோம். அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும்.

நன்றி- தீக்கதிர்

அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும் : குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பேட்டி

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாது காப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தஞ்சாவூர் பள்ளி ஒன்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது சம்பந்தமாக தொடர்புடைய பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி, உடனிருந்த மாணவிகள், தாயார் மற்றும் உறவினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், கல்வித்துறை முதன்மை அலுவலர், காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில், நடந்த பாலியல் வன்கொடுமை உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.பாதிக்கப்பட்ட சிறுமியின் மேல்படிப்புக்கும் எதிர்கால திருமண வாழ்விற்கும் அரசின் உதவிக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். குற்றம் செய்துள்ள ஆசிரியர் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.வேலியே பயிரை மேயும் நிலையில் ஆசிரியர்கள் இச்செயலில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது. இத்தகையவர்களுக்கு கடும் தண்டனை வழங்கிட அரசிற்கு பரிந்துரை செய்வோம் என்றார். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க முதன்மை கல்வி அலுவலருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. புகார் பெட்டியின் மூலம் பெறப்படும் புகார்களை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கும் வகையில் தீர்வு காணப்படவேண்டும்.

மேலும் அனைத்துப் பள்ளிகளிலும் இது சம்பந்தமாக வகுப்புகள் நடத்திட வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 65 புகார்கள் பெறப்பட்டதில் இதுவரை 2 பேருக்கு நிவாரணம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேருக்கு நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்தார்

Saturday 21 September 2013

25 பேர் உள்ள சத்துணவு மையங்கள் இணைப்பு : காலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கை.

அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையத்தை, அருகில் உள்ள மையத்துடன் இணைக்கப்பட உள்ளது. இம்மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், இணைக்கும் பணி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
25 குழந்தைகளுக்கு குறைவான மையங்களிலும், இந்த மூன்று பேர் பணியாற்றுவதால், பணியிடம் காலியாக உள்ள மையத்தில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், சமையலர் அல்லது அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள், சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள மையங்களை, அருகில் உள்ள மையத்துடன் இணைத்து விட்டால், ஆள் பற்றாக்குறை சமன் செய்வதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்க முடியும், என அரசு கருதுகிறது.

முதல்வர் சிந்திப்பாரா?

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளில் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்பது புரியதா புதிராக உள்ளது. தனது தேர்தல் அறிக்கையில் அவர் உச்சரித்த வார்த்தைகளை கேட்ட எம் இனம் கொண்டாடிய மகிழ்விற்கு அளவே இல்லை. நான் முதலமைச்சர் ஆனால் 6வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை களைய இயக்க பொறுப்பாளர்களை அழைத்து பேசுவேன் என்றும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிடுவேன் என்றும் அவர் உச்சரித்த வார்த்தைகள் காட்டு தீயாய் தமிழகம் முழுமையும் பரவியது. அனைத்து அரசு ஊழியர் இல்லங்களிலும் விழாக் கோலம் பூண்டது. அதன் எதிரொலிதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தபால் ஓட்டு அ.இ.அ.தி.மு.கவிற்கு எகிறயது என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் பின் அமோக வெற்றியடைந்து முதல்வரான பின்பு இந்த உறுதி மொழி குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாதது எங்களைப் போன்ற இடைநிலை ஆசிரியர்களின் மனதை மிகவும் வருத்துகிறது. இத்தகவல் முதல்வருக்கு தெரியாது என்று சொன்னால் சிறு பிள்ளை கூட நம்பாது. ஒரு வேளை முதல்வர் கவனத்துக்கு செல்லாமல் தடுக்கும் தீய சக்தி எது? ஆராய வேண்டாமா? எத்தனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், இறுதியில் மாவட்ட நிர்வாகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மறியல். மற்ற தோழமை இயக்கங்களும் தனிச்சங்க நடவடிக்கைகள என தொடர் கதையாய் தொடர்ந்தும் முதல்வர் மௌனம் சாதிப்பது எங்களை நம்ப வைத்து பலிகடவாக்கியது போல் உள்ளது. உளவுத்துறை நண்பர்கள் இவ்விசயத்தை முதல்வரிடம் கொண்டுபோக வேண்டும். ஜனநாயக நாட்டில் உரிமைக்காக போராடுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. எனவே மதிப்புமிகு முதல்வர் அவர்கள் இயக்க பொறுப்பாளர்களை அழைத்து அந்த பதட்டம் மிகுந்த செயலுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்ய முன் வந்தால் அவரது புகழை வரலாறு உள்ள வரை பேசும். சிந்திப்பாரா முதல்வர்?

தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிக் கூடங்களாக தரம் உயர்வு: அரசு ஆணை வெளியீடு

சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

Wednesday 7 August 2013

ஒரு இடைநிலை ஆசிரியரின் ஏக்கம்!!!

தமிழ்நாட்டு ஆசிரியர் சங்கங்களில் வலுவானதும் வலிமையானதும் ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்கள்தான். தற்பொழுது 6வது ஊதியக்குழுவில் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து இருப்பவனும் இடைநிலை ஆசிரியர்தான். அனைத்து சங்கங்களும் தனிச்சங்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அரசாங்கம் இந்த விசயத்தை பற்றி யோசிக்க தொடங்கியிருப்பதாக வந்துள்ள செய்தி ஒரளவு ஆறுதல் அளித்தாலும் சங்கங்கள் தங்களிடம் உள்ள காழ்புணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்ட ஒன்றுபட்ட போராட்டங்களை அறிவித்தால் நிச்சயம் அரசாங்கத்தின் பார்வையை நம் பக்கம் திருப்பலாம். கடுமையான போராட்டங்கள் இல்லாமல் தீர்வு என்பது எட்டாக்கனியாகி விடும். பல ஆசிரியர்கள் மனக்குமுரல்களை நம்மிடம் தொடர்ந்து கொட்டி வருவதை சங்க தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. எத்தனையோ போராட்ட வடுக்களை தாங்கிய தலைவர்களை பெற்றுள்ள இயக்கங்கள் இதற்கான முன் வடிவை எடுக்க வேண்டும். கடந்த கால ஒன்றுபட்ட போராட்டங்களில் நடந்தது போல் அல்லாமல் களத்தில் சூடு குறையாமல் கடைசி வரை போர்குணமிக்க வீரர்களாய் களம் காண்போம். வெற்றி கிட்டும் வரை போராடுவோம். இறுதி வெற்றி நமதே என்ற இலட்சிய வாசகத்தை மனதில் தாங்கி களம் காண எத்தனையோ இலட்சம் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இயக்கத்தலைவர்களே ஒன்றுபடுங்கள். ஒன்று திரட்டுங்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சணை தீராமல் இனி தமிழ்நாட்டில் இயக்கம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும்.  நாம் சேர்ந்து அழுவோம். நம் அழுகுரல் ஆட்சியாளர்களின் செவிப்பறையை தட்டட்டும். தொடர்ந்து ஏமாறுவதற்கு இடைநிலையாசிரியர்கள் ஒன்றும் புரியாதவர்கள் அல்ல. நமது ஒன்றுபட்ட சக்தி என்பது நிச்சயம் நம் துயரோட்டும். 
மத்திய மாநில அரசுகளோ தாராளமயம். தனியார்மயம்உலகமயம் அகியவற்றின் தாக்குதல்களால் நிலைதடுமாறிப் போயிருக்கின்ற – போராட்ட உணர்வு மழுங்கிப் போய் நிற்கின்ற மக்கள் விழித்தெழமாட்டர்கள் எனக்கனவு காண்கிறது.
மரம் சும்மா இருந்தாலும் கற்று அதைச் சும்மா இருக்கவிடாது.
ஒய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல: தியானம்.
பின் வாங்கல் அல்ல பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்
(நன்றி: கவிதை : பசுவய்யா) .

இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவில் நிகழ்த்தப்பட்ட அவமானம்

ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது. 

இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர். பல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. 
நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 
அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்? அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.ஆசிரியர்களே, சிந்திப்பீர்!

ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்க தடை :அரசு அதிரடி உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தொலைதூரக்கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை.

உயர்கல்விக்கு ஊக்கத்தொகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வித்தகுதியை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வகையில் அவர்களின் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம். (ஒரு ஊக்க ஊதியம் என்பது 2 இன்கிரிமென்ட் ஆகும்).
உதாரணத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தால் ஒரு ஊக்கத்தொகையும், பி.எட். முடித்தால் இன்னொரு ஊக்கத்தொகையும் பெறலாம். அதாவது அந்த ஆசிரியருக்கு 4 இன்கிரிமென்ட்டுகள் வழங்கப்படும். ஒரு இன்கிரிமென்ட் என்பது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் (கிரேடு பே) 3 சதவீதத்தை குறிக்கும்.
விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்க தடை
இதேபோல் பட்டதாரி ஆசிரியர் முதுகலை பட்டமும், எம்.எட். பட்டமும் பெற்றால் இதேபோல் 2 ஊக்க ஊதியங்களை பெறுவார். அண்மையில் அவர்களுக்கு எம்.பில். பி.எச்டி. படிப்புகளுக்கும் ஊக்க ஊதியம் பெற அனுமதி வழங்கப்பட்டது. நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு 50 சதவீத அடிப்படை சம்பளமும், முழு அகவிலைப்படியும் சம்பளமாக வழங்கப்படும்
இந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பட்டப்படிப்போ, பட்ட மேற்படிப்போ, பி.எட். படிப்போ படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொலைதூரக்கல்வி படிக்கலாம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த காலங்களை விடுமுறை விடுப்பு நீங்கலாக, அவர்களின் கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த அலுவலின் பேரில் ஈட்டா விடுப்பு வழங்கியும் அந்த விடுப்புகள் போக மீதி நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கியும் முறைப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த அனுமதியானது அரசாணை வெளியிடப்படும் நாளுக்கு முந்தைய நாளில் (22.7.2013) நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகள் படிக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பில் செல்ல அனுமதி வழங்கி அவர்கள் நேரடி சேர்க்கை மூலம் படிக்க செல்வதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட், பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க அனுமதி வழங்குவதை தவிர்க்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

TNPTF மறியல் செய்தியறிக்கை

டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு

சென்னை: "வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை, 2,68,160 பேர் எழுதுகின்றனர். மறுநாள் 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இதை, 4,11,634 பேர் எழுதுகின்றனர்.
முதல் தாள் தேர்வு, 870 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. ஏழு லட்சம் பேர், தேர்வை எழுதுவதால், தேர்வை கண்காணிப்பதற்கு, டி.ஆர்.பி., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார் பதவியேற்றுள்ள நிலையில், டி.இ.டி., தேர்வு, விரைவில் நடக்க உள்ளது.
தேர்வு ஏற்பாடுகள் குறித்து, விபு நய்யார் கூறியதாவது: அதிகமான தேர்வர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை, முழுவீச்சில் செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இவ்வாறு, விபு நய்யார் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆண்டுக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு செய்யும் பணியை செய்து வருகிறது. ஆனால், இந்த அமைப்பில், போதுமான பணியாளர்கள் இல்லாத நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க, இதுவரை பதவியில் இருந்த தலைவர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பதவியேற்றுள்ள புதிய தலைவராவது, பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்கவும், டி.ஆர்.பி.,யின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Wednesday 17 April 2013

தமிழ்நாடு அரசு ஊழியா் - ஆசிாியா் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFETO) மாலை நேர தா்ணா

        தமிழ்நாடு அரசு ஊழியா் - ஆசிாியா் சங்கங்களின்  கூட்டமைப்பு (TANFETO)  சாா்பாக 17.04.2013 அன்று வட்டார தலைநகரங்களில் 4 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி  கவன ஈா்ப்பு மாலை நேர தா்ணா  நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

          அதன்படி குழித்துறை சந்திப்பில் வைத்து   மாலை நேர தா்ணா நடைபெற்றது. TNPTF மாநில துணைப் பொதுச்செயலாளா் திரு.சி.பாலச்சந்தா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.பல்வேறு தோழமை சங்க நிா்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.