Thursday, 28 February 2013
பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை
*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10
சதவீத கூடுதல் வரி.
* ரூ.
10 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் உடைய உள்ளூர் கம்பெனிகளுக்கு 5-10% சர்சார்ஜ்
விதிக்கப்படும்
* நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதி, இறக்குமதி 43 விழுக்காடு.
* சர்வதேச பொருளாதாரம் 3.9
சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக சரிவு
* நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே.
*மாற்றுத் திறனாளிகள் நலனிற்கு ரூ.110 கோடி
ஒதுக்கீடு.
* மருத்துவ கல்வி, பயிற்சிக்கு ரூ.4,727
கோடி ஒதுக்கீடு
* உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன்
டன்னாக இருக்கும்
*ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 2,400 கோடி
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை; ரூ.2,000 சலுகை
தனிநபர் வருமான வரிவிலக்கு
உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதேவேளையில், ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிதிப்பில் ரூ.2000 சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று 2013-14-ம்
நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது
உரையில் தனிநபர் வருமான வரி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:
* வருமான வரிவிதிப்பில்
மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு,
அவர்களுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி.
*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல்
ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.
*10 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி
*10 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி
பட்ஜெட் 2012-13: வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி
ரூ.25 லட்சம் வரை வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல்
செய்தார். அதில், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக
விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு, அவர்களது வட்டியில்
ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
இதன்படி வீட்டு கடன் தொகை ரூ.25 லட்சமாக
இருக்க வேண்டும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட கனவுகாணும் குடும்பங்களுக்கு ஏதுவாக
இருக்கும். மேலும் கட்டுமானப் பணி, ஸ்டீல், சிமென்ட், செங்கல், மரம், கண்ணாடி
போன்றவற்றின் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் சிதம்பரம்
கூறினார்.
கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அதில் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது
பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று
தாக்கல் செய்தார். அதில் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய
அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
முறைகேடுகளுக்கு துணைபோனால்... பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
"பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு
உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம்
ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
எச்சரித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: தேர்வு
மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்கிட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும்,
ஜெனரேட்டர் வசதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில்,
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளையும், முழுவீச்சில் செய்திடவும் உத்தரவிடப்பட்டு
உள்ளது.
தேர்வு மையங்களில், பறக்கும் படை
குழுவினர், அவ்வப்போது சென்று, தேர்வுகளை கண்காணிப்பர். மாநிலம் முழுவதும்,
4,000த்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள், தேர்வுப் பணிகளை
கண்காணிப்பர். அறிவியல் மற்றும் கணிதப்பாட தேர்வுகளின் போது, வேறு பள்ளிகளைச்
சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களாக இருப்பர்.
அண்ணா பல்கலை அலுவலர்களும், தேர்வு
மையங்களை பார்வையிடுவர். தேர்வு நேரங்களில், பள்ளியைச் சேர்ந்த தாளாளர்கள்,
ஆசிரியர்கள், பணியாளர்கள் யாரும், தேர்வு மைய வளாகத்தில் இருக்கக் கூடாது.
துண்டுத்தாள் வைத்திருத்தல்,
துண்டுத்தாளை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவரைப் பார்த்து எழுதுதல், தேர்வு
அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள்
மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடும் குற்றங்களாகும். இந்த செயல்களில்
ஈடுபடுவோருக்கு, உரிய தண்டனைகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு, ஒழுங்கீனச்
செயல்களில் ஈடுபட்டு, 229 மாணவர், தண்டனை பெற்றனர். தேர்வு மையங்களில், ஒழுங்கீனச்
செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால், சம்பந்தபட்ட
பள்ளிகளின் தேர்வு மையத்தை ரத்து செய்வதுடன், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து
செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைவாசிகள், சிறை வளாகத்திலேயே,
தேர்வை எழுத, சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, புழல் சிறை
வளாகத்தில், 40 சிறைவாசிகள், இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். சிறை
வளாகத்திலேயே, தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வசுந்தரா
கூறியுள்ளார்.
அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்
ஒரு நாட்டின் பொருளாதார
வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல்
மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம்
தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியல் என்பது, வாழ்க்கையோடு
தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண
மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும்.
அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.
எந்த நாகரிகத்துக்கும் முன்னோடி
அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை
மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி
ஆயுதங்களாக்கினர். கம்ப்யூட்டர் முதல் 3ஜி மொபைல் போன், புதிய வாகனங்கள்,
விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், டெஸ்ட் டியூப் குழந்தை, நவீன ராக்கெட்டுகள்,
செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது.
வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப,
கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும்
விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த
வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான
இந்தியாவை உருவாக்கலாம்.
இருளை விரட்டிய மின்விளக்கு;
தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும்
கம்ப்யூட்டர்கள்; மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்;
எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன்
பறக்க விமானம்; வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை
தர ராக்கெட்டுகள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை
உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை
மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ
முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.
தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன்,
ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர்
1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது
பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள்.
பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை,
முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன்
சயின்ஸ்" நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
ஒருமுறை இவர், கப்பலில்
பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக் கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக
இருக்கிறது" என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், "ராமன் விளைவை"
கண்டுபிடித்தார்.
"நீர் மற்றும் காற்று போன்ற
தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது.
அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது" என
கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு
வழங்கப்பட்டது.
தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்
தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த
தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம்
வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு
அறிவித்துள்ளது.
பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின்
பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படுகிறதா,
விளையாட்டு, இதர கற்பித்தலில் ஈடுபாடு, ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம், நூலக வசதி,
பள்ளியின் சுற்றுச்சூழல், வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட, 10 வகைகளில்,
ஒவ்வொன்றுக்கும், புள்ளிகள் தரப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில், பள்ளிகள் பெறும்
புள்ளிகள் அடிப்படையில், "கிரேடு" வழங்கப்படும். அதன்படி, 76 புள்ளிகள் முதல், 100
வரை பெறும் பள்ளிகள், "ஏ" கிரேடு, 51-75 வரையிலான புள்ளிகளைப் பெறும் பள்ளிகளுக்கு,
"பி" கிரேடு, 26-50 வரை பெறும் பள்ளிகளுக்கு, "சி" கிரேடு மற்றும் 26 புள்ளிகளுக்கு
கீழே பெறும் பள்ளிகளுக்கு, "டி" கிரேடும் வழங்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு
அறிவித்துள்ளது.
புதிய கட்டணங்களை நிர்ணயிக்க,
தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது, மேற்கண்ட புள்ளி விவரங்களை, விண்ணப்பத்தில்
தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, கட்டண நிர்ணயக்குழு வட்டாரங்கள்
தெரிவித்தன.
தமிழக அமைச்சரவை மாற்றம் , புதிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.வைகைச்செல்வன்
ழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த திருமதி.கோகுல இந்திரா, பள்ளி
கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்த
திரு.என்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் திரு.கே.எஸ்.விஜய்
ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில், திருமதி. டி.பி.பூனாட்சி,
டாக்டர் திரு.வைகைச்செல்வன், திரு.கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களாக
நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை இலாகா
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு சுகாதாரத்துறை இலாகா ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. வைகைச்செல்வன் பள்ளி கல்வித்துறை மற்றும் இளைஞர் நலத்துறை
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.செந்தூர்பாண்டியன் சுற்றுலாத்துறை அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கூடுதலாக
சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புஇலாகா
ஒப்படைக்கப்பட்டுள்ளது
புதிய அமைச்சர்கள் நாளை காலை 11
மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொள்வார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்., 30 தேதி அரசு விடுமுறை ரத்து செய்து அரசு உத்தரவு
வங்கிகள் அரையாண்டு
கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து
செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும்,
பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு,
அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில், ஆண்டு தோறும், செப்., 30ம் தேதி,
வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு
வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த
விடுமுறையை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என, மத்திய அரசின் நிதித்துறை,
மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது.இதை ஏற்று, வங்கிகளின்
அரையாண்டு கணக்கு முடிப்பிற்காக, அறிவிக்கப்பட்ட, செப்., 30ம் தேதியை, அரசு
விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு
அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு
முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில்
புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்
வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியர் குழுவினர், பாடங்கள்
சம்பந்தபட்ட பொருட்களுடன், பள்ளி வாரியாக நேரில் ஆஜராகி மாணவ, மாணவியருக்கு
கண்காட்சி மற்றும் செய்முறை விளக்கங்களுடன், அறிவியலை கற்பிக்கின்றனர். அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான
யுக்திகளை கல்வித் துறை கையாண்டு வருகிறது.
சிறப்பு வகுப்புகள், பாடங்களில்
அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல், பல்வேறு வகையான கற்பித்தல்
உபகரணங்களைக் கொண்டு பாடங்களை கற்பித்தல் என, பல வகையான திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன.
இந்த வரிசையில், ஆறு முதல் எட்டாம்
வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும்
வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், புதுமையான
கற்பித்தல் திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த, "ஈவன்ட் எஜூ
சிஸ்டம்" என்ற நிறுவனத்துடன் இணைந்து, இத்திட்டத்தை முதற்கட்டமாக, காஞ்சிபுரம்
மாவட்டத்தில், 40 பள்ளிகளில் செயல்படுத்தியது. பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு, 40
அறிவியல் உபகரணங்களைக் கொண்டு, பள்ளி வாரியாக சென்று மாணவ, மாணவியருக்கு,
அறிவியலைப் பற்றி விளக்கியது.
பயிற்சி குழுவைச் சேர்ந்த அரசுப்
பள்ளி ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், "காந்தத்தின் பண்புகள் என்றால், காந்தங்களின்
வகைகளை காட்டி, அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறோம். மலரின் பாகங்கள் எனில்,
மிகப்பெரிய மலரை, மாணவர்கள் முன் வைத்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும், தனித்தனியாக
காட்டி விளக்குகிறோம். இதேபோல், பல கண்காட்சிகளை நடத்தும் திட்டங்கள் உள்ளன,''
என்றார்.
இத்திட்டம் மாணவ, மாணவியர்
மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்ததாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள
அரசு பள்ளிகளில் செயல்படுத்த, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு
செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம்
இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு
முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது.
புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும் பணியில் சேர்வதற்கேற்ப தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என்று டி.ஆர்.பியிடம் கல்வித்துறை தெரிவித்துள்ளன. என்வே, அடுத்த டி.இ.டி தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்வை நடத்தி மே மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதிகப்படியான தகவல்களுக்கு +1, +2 வகுப்பு பாட புத்தகங்களை படித்தால் போதும்.
பொதுவான வினாக்களுக்கு தினமும் செய்தித்தாள்களைப் படித்து குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முக்கிய செய்தி, கட்டுரைகள், தலையங்கங்கள் போன்றவற்றினை சேகரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாடவாரியான அட்டவணை தயார் செய்தும், பழைய வினாத்தாள்களை பார்த்துக்கொள்ளுதல், தேர்வுக்கு முன் குறைந்த பட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுதி பழ வேண்டும்.
ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாமல் பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் நிச்சயம் பலன் உண்டு. பட்டங்களுக்காக எழுதும் தேர்வு இதுவல்ல, பணிக்காக எழுதும் தேர்வு என்பதை நினைவில் நிறுத்தி திரைகடல் ஒடி திரவியம் தேடுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
When hand and mind work hard as one,
Success strokes your palms
உள்ளமும், கையும் உழைக்கத் துணிந்தால்
உள்ளங்கைகளில் வெற்றி குவியும்!
ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம் எப்போது? - dinamalar
மதுரையில், அரசு மற்றும்
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவுப்படி, மாதம்தோறும் நடக்கும்
ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம், மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் நடத்தபடாததால்
ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு
மற்றும் உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான குறைதீர்க்
கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மாதத்தில் முதல்
சனிக்கிழமையன்று இக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நடைமுறை, அரசு மற்றும்
உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் உள்ள நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை
ஒருமுறை கூட கூட்டம் நடக்கவில்லை.
இதனால், ஆசிரியர்களின் சேமநல நிதி
பெறுதல், சரண்டர், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பிரச்னைகளுக்கு தீர்வு, ஊதிய
குழுவில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்தல் போன்ற பிரச்னைகளை, உரிய அதிகாரிகளிடம்
தெரிவிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாவட்ட தலைவர் முத்துக்குமார், பொருளாளர் தென்னவன், முன்னாள் நிர்வாகி சகாதேவன்
கூறுகையில், "மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர், கல்வி அதிகாரியிடம் மனு
கொடுத்தோம். குறைதீர்க் கூட்டம் நடத்தினால், 28 தொடக்க பள்ளி, 152 இடைநிலை, 240
பட்டதாரி, 151 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 900 ஆசிரியர்கள் பயனடைவர்,"
என்றனர். மாநகராட்சி கல்வி அதிகாரி கூறுகையில், "அடுத்த மாதம் முதல் வாரத்தில்
சனிக்கிழமைதோறும் ஆசிரியர்கள் குறைதீர்க் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது"
என்றார்
தேசிய திறன் மேம்பாட்டுக் கவுன்சிலின் பணிகள்
6 முதல் 16 வயது வரையான 30 கோடி குழந்தைகளில்,
10% பேர் மட்டுமே பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆண்டுதோறும்,
முதல்முறையாக பணியில் சேரும் 130 லட்சம் பேரில், 45% பேர் கல்வியறிவு இல்லாதவர்கள்.
25% பேர் தொடக்கக் கல்வி மட்டுமே பெற்றவர்கள்.
மொத்த பணியாளர்களில், 10%க்கும் குறைவானவர்கள்
மட்டுமே, முறைசார் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். அதேசமயம், முறைசாரா
நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள், குறைந்த சம்பளம், பணிப் பாதுகாப்பின்மை,
அதிகமான பணிச்சுமை, அதிக பணிநேரம் உள்ளிட்ட பல விஷயங்களில்
பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போது, நாட்டிலுள்ள திறன் மேம்பாட்டு
பயிற்சிகளின் ஆள் கொள்ளளவு 45 லட்சத்திற்கும் குறைவே. வரும் 2022ம் ஆண்டு, 21
முக்கியத் துறைகளில், திறன்வாய்ந்த நிபுணர்களுக்கான பற்றாக்குறை 2440 லட்சங்களாக
இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கும்,
நிபுணர்களின் தேவைக்கும் இருக்கும் பொருத்தமற்ற நிலையின் காரணமாக, அதிகபட்ச
வேலையில்லா விகிதம், திறன் பற்றாக்குறையுடன் ஒத்திருக்கிறது.
திறன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதே, இன்றைய
நிலையில் இந்திய அரசாங்கத்தின் முக்கிய ஆவலாக உள்ளது. நாடு எதிர்நோக்கியிருக்கும்
சவால்களில் முதன்மையானது, கல்வி - வேலைவாய்ப்புத் திறன் - பணிகள் ஆகியவற்றுக்கு
இடையிலான தொடர்புகளை வலுவாக்குவதே ஆகும். பிரதமரைத் தலைவராகக் கொண்டு, கடந்த 2008ம்
ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில், அந்த சவாலை சமாளிக்கும்
நடவடிக்கையின் முதற்படியாகும். இந்தக் கவுன்சிலின் செயல்பாட்டுப் பிரிவாக, 2009ம்
ஆண்டு, தேசிய திறன் மேம்பாட்டுக் கார்பரேஷன் அமைக்கப்பட்டது. 2010ம் ஆண்டு, திறன்
மேம்பாடு தொடர்பான பிரதமரின் ஆலோசகராக, ராமடோரை என்பவர் நியமிக்கப்பட்டார்.
தனியார் - பொது
ஒத்துழைப்பு
தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் என்பது, அந்த
வகையில், தனியார் - அரசு ஒத்துழைப்பில் ஏற்பட்ட முதல் அமைப்பாகும். வரும் 2022ம்
ஆண்டு முடிவில், 15 கோடி மக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியளிப்பது இதன் நோக்கம்.
தனியாருடன் இணைந்து, நாடெங்கிலுமுள்ள தனியார் திறன் வளர்ப்பு மையங்களுக்கு,
இக்கவுன்சில் உதவிபுரிகிறது.
ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் ஹார்டுவேர்,
டெக்ஸ்டைல் மற்றும் கார்மென்ட்ஸ், லெதர் அன்ட் லெதர் குட்ஸ், ஜெம்ஸ் மற்றும்
ஜுவல்லரி, பிபிஓ, டூரிஸம், ஹெல்த்கேர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற முக்கியத்
துறைகளுக்கு 24 முதல் 25 கோடிகள் வரையான திறன்மிகு நபர்களை உருவாக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.,- Dinamalar
சேலம் பெரியார் பல்கலையில், ஆறே
மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து,
வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை
முற்றுகையிட்டனர்.
சேலம் பெரியார் பல்கலையில், 2008ம்
ஆண்டுக்கு முன் வரை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட
மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. 2008ம்
ஆண்டு, கல்வியியல் பல்கலை துவக்கப்பட்டு, அதில் கல்வியியல் கல்லூரிகள்
இணைக்கப்பட்டன. கல்வியியல் பல்கலை அறிவிப்பு வரும் நேரத்தில், 2008 ஜன., மாதத்தில்,
10க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு, பெரியார் பல்கலை இணைவு
வழங்கியுள்ளது. அக்கல்லூரிகளில், உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும்,
சேர்க்கப்பட்ட மாணவர்களை, அதே ஆண்டு மே மாதத்தில் தேர்வெழுதவும் அனுமதித்துள்ளது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆறே மாதத்தில் பட்டச்சான்றிதழையும்
வழங்கியது.
அந்த பேட்ஜ் படித்த மாணவர்களில்
ஒருவரான பிரபு, டி.ஆர்.பி., நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். இவர் தர்மபுரி
கிரிவாசன் கல்வியியல் கல்லூரியில், 2008ம் ஆண்டு, பி.எட்., பட்டம் பெற்றுள்ளார்.
சான்றிதழ் சரி பார்ப்பில், 2007 நவம்பரில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்த, இவர்
அடுத்த ஆறு மாதங்களுக்குள், 2008 மே மாதம் பி.எட்., பட்டம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, இவரது பி.எட்., பட்டம் செல்லாது என, டி.ஆர்.பி., தெரிவித்து, இவருக்கு
வேலை வாய்ப்பை மறுத்துள்ளது.
இதனால், இதே பேட்ஜில் படித்த மற்ற
மாணவ, மாணவியரும் கடும் அதிர்ச்சியடைந்து, நேற்று பல்கலையை முற்றுகையிட்டனர்.
ஓமலூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மாணவர்களுடன்
பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
பெரியார் பல்கலை நடத்திய தேர்வில், வெற்றி பெற்று, பல்கலை வழங்கிய பட்டத்தை,
டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்துள்ளது. இதனால், 2008ம் ஆண்டு, பி.எட்., படித்த
மாணவர்கள் கலக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். பல்கலை கல்வியியல் கல்லூரிகளுக்கு, ஜனவரி
மாதத்தில் தான் அங்கீகாரமே கொடுத்தது. ஆனால், அடுத்த ஆறே மாதத்தில், தேர்வுக்கு
மாணவர்களையும் அனுமதித்துள்ளது.
ஓராண்டு பட்டப்படிப்பான பி.எட்.,
தேர்வெழுத, குறைந்த பட்சம், 900 மணி நேரம் அல்லது, 150 பணி நாள் பங்கேற்க வேண்டும்
என, உள்ள அரசு விதிமுறையை, பயன்படுத்தி ஆறே மாதத்தில் மாணவர்களை தேர்வெழுத
அனுமதித்தது மட்டுமல்லாமல், பட்டமும் வழங்கியுள்ளது. ஓராண்டு படிப்புக்கு, ஆறு
மாதத்தில் சான்றிதழ் வழங்கினால், அது செல்லுமா என்பது குறித்து பல்கலை
நிர்வாகிகளுக்கு தெரியாதா என்பது தான் புரியாத புதிர்.
இவை தெரிந்தும், பணத்துக்காக
சான்றிதழ்களை வழங்கி, பல மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர். தற்போது
பல்கலையில் கேட்டால், "தவறாக அட்மிஷன் போட்ட கல்லூரியில் போய் கேளுங்கள்" என,
கூறுகின்றனர். கல்லூரி வழங்கிய மாணவர் பட்டியலில், தகுதியில்லாத பட்சத்தில்,
பல்கலை, எதற்காக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அரசு பல்கலை என்பதாலேயே பல நூறு
மாணவர்கள், இதுபோல தேர்வு எழுதியுள்ளனர்.
இவர்களின் வாழ்க்கை தற்போது,
கேள்விக் குறியாகியுள்ளது. இதை பற்றி இங்கு யாருக்கும் அக்கறையில்லை. பெரியார்
பல்கலையில் முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்கதையாகவே உள்ளன. இவ்வாறு அவர்கள்
கூறினர்.
தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரி தலைமையில் சட்டப்பூர்வ குழு
தனியார் பள்ளிகள் கூடுதல்
கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ
குழுக்களை அரசு அமைத்துள்ளது.
தனியார் பள்ளிகளின் கட்டணங்களை
முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு
அமைக்கப்பட்டது. இந்த குழு 2010ம் ஆண்டில் தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி,
அந்தந்த பள்ளிகளின் வரவு செலவுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்தது. குழு
நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும்,
கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளி கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், தனியார் பள்ளிகளில் அந்த கட்டணங்களை வசூலிப்பதாக கூறினாலும், வெவ்வேறு வகையான வசதிகளை காட்டி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இது குறித்து அவ்வப்போது கட்டண குழுவிடம் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்டண குழுவிடம் நேரில் வந்து புகார் தெரிவிக்க பெற்றோர் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.
மேலும், பெற்றோர் சங்கங்களும் ஒன்று திரண்டு, சில கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தன. அதில் ஒன்று, மாவட்ட வாரியாக புகார் தெரிவிக்கும் பிரிவுகளை தொடங்க வேண்டும் என்பது. இதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி சட்டப் பூர்வமான குழுக்களை அமைக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தலைவர்களாக கொண்டு இந்த குழுக்கள் செயல் படும். அந்த குழுவில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்ட தலைமை இடத்தில் செயல்படும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட தலைநகரில் செயல்படும் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 7 பேரை உள்ளடக்கி அந்தந்த மாவட்டத்தில் குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் இந்த குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.
தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்த புகார்களை பெற்றோர் மேற்கண்ட குழுவின் தலைவராக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். பெறப்படும் புகார்களின் பேரில் சம்மன் அனுப்பி குறிப்பிட்ட பள்ளி முதல் வர் மற்றும் பெற்றோர் என இரு தரப்பினரிடமும் விசாரித்து, அதன் அறிக்கையை சென்னையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது கட்டணக் குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்.
கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளி கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், தனியார் பள்ளிகளில் அந்த கட்டணங்களை வசூலிப்பதாக கூறினாலும், வெவ்வேறு வகையான வசதிகளை காட்டி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். இது குறித்து அவ்வப்போது கட்டண குழுவிடம் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்டண குழுவிடம் நேரில் வந்து புகார் தெரிவிக்க பெற்றோர் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.
மேலும், பெற்றோர் சங்கங்களும் ஒன்று திரண்டு, சில கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தன. அதில் ஒன்று, மாவட்ட வாரியாக புகார் தெரிவிக்கும் பிரிவுகளை தொடங்க வேண்டும் என்பது. இதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி சட்டப் பூர்வமான குழுக்களை அமைக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தலைவர்களாக கொண்டு இந்த குழுக்கள் செயல் படும். அந்த குழுவில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்ட தலைமை இடத்தில் செயல்படும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட தலைநகரில் செயல்படும் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 7 பேரை உள்ளடக்கி அந்தந்த மாவட்டத்தில் குழுக்கள் செயல்படும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் இந்த குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.
தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்த புகார்களை பெற்றோர் மேற்கண்ட குழுவின் தலைவராக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். பெறப்படும் புகார்களின் பேரில் சம்மன் அனுப்பி குறிப்பிட்ட பள்ளி முதல் வர் மற்றும் பெற்றோர் என இரு தரப்பினரிடமும் விசாரித்து, அதன் அறிக்கையை சென்னையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது கட்டணக் குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில்
"ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில்
38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க
அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க பல்வேறு நவீன
தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.
முதலில் 14 பள்ளிகளில்
"ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் கோரியவர்களிடம் தகுந்த வசதிகள் இல்லாததால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் எல்காட் நிறுவனம் மூலம் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் கொண்ட சென்னைப் பள்ளிகளை 5
ஆண்டுகளுக்கு இயக்க தோராய மதிப்பு பெறப்பட்டது. இதன்படி ஒரு பள்ளிக்கு ரூ. 5.76
லட்சம் செலவாகும். மொத்தம் 14 பள்ளிகளுக்கு ரூ. 80.65 லட்சம் செலவாகும். ஒப்பந்த
காலம் முடிந்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகளுக்கே ஒப்படைக்க
வேண்டும்.
எனவே "ஸ்மார்ட்' வகுப்பறை
வசதியை எல்காட் நிறுவனம் மூலம் பெறவும், கட்டட துறையின் மூலம் தளவாடங்கள் மற்றும்
வசதிகள் செய்து கொடுக்கவும், இதற்கான செலவை 2012-13 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளவும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னைப் பள்ளிகளில் உள்ள
நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குவது மற்றும் புனரமைத்தல் தொடர்பான
தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 76 உயர் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் 100 புத்தகங்கள் அடங்கிய செட்
வழங்கப்படும்.
மாணவ-மாணவிகளிடம் ஆர்வம் குறைந்ததால் 117 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன
ஆசிரியர் பயிற்சி முடிந்து
மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால் என்றாவது ஒரு
நாள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது... அதனால் பிளஸ்-2 படித்து
முடித்தவுடன் பெரும்பாலான மாணவிகள் உயர் கல்வியை தொடராமல் டிப்ளமோ ஆசிரியர்
பயிற்சியில் சேர்ந்து படிப்பார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிலை மாறி
வருகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பை, மாநில அளவில் மாற்றியதால் ஏற்கனவே
படித்து முடித்த 4 லட்சத்திற்கும் மேலான இடைநிலை ஆசிரியர்களின் நிலை கேள்விக்
குறியாக உள்ளது.
இதனால் ஆசிரியர் பயிற்சியில் சேர
மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக ஆசிரியர்
பயிற்சி பள்ளிகள் காலியாக கிடந்தன. ஒரு சில பள்ளிகளில் ஒருவர் கூட
சேரவில்லை.
இதன் காரணமாக தனியார் ஆசிரியர்
பயிற்சி பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும்
ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 80 மற்றும் தனியார் ஆசிரியர் பள்ளிகள் என மொத்தம் 611
உள்ளன. இவற்றில் கடந்த 5 வருடத்தில் மட்டும் 117 பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு
உள்ளன.
இதன் மூலம் 41,900 பேர் ஆண்டுக்கு
படித்து முடித்து வெளியே செல்லலாம். ஆனால் கடந்த வருடம் 8,415 பேர் மட்டுமே
பயிற்சியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள இடங்களில்
சேருவதற்கு மாணவர்கள் இல்லாமல் காலியாக கிடந்தன.
ஆசிரியர் பயிற்சி பள்ளியில்
மாணவ-மாணவிகள் சேராததற்கு மாநில சீனியாரிட்டி, ஆசிரியர் தகுதித் தேர்வு போன்றவையே
காரணங்களாக கூறப்படுகிறது.
அரசின் இந்த கொள்கையால் படித்து
விட்டு பல லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் காத்திருப்பதாக உயர்நிலை
மற்றும் மேல்நிலை பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி
தெரிவித்தார்.
Friday, 15 February 2013
பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்
வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சங்க மாநிலப்பொதுச்செயலர் கூறியது: வரும் 20,21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 20,21ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு அளவில் பங்கேற்க உள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
பொது வேலை நிறுத்தத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவும், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறவும், தன் பங்கேற்புத்திட்டத்தைக் கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும் வலியுறுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத சந்தா தொகையை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என்றார்.
மாநிலச் செயலாளர் வின்சென்ட், மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன், மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Saturday, 2 February 2013
பணியிடை பயிற்சி ரத்து செய்ய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
"பள்ளித் தலைமையாசிரியர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உண்டு உறைவிடப்
பயிற்சி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்" என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின், மாநிலச் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக
அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரிலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஃபிப்ரவரி, 4-7, 11-14 மற்றும், 18-19 என்ற
அளவில், பத்து நாட்கள் நடக்க உள்ள உண்டு உறைவிடப் பயிற்சியை ரத்து செய்ய
வேண்டும்.அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி நடக்கிற
தகவல் அறிந்து, பள்ளித் தலைமையாசியிர்கள், பெருத்த மன உளைச்சலுக்கு
உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான தலைமையாசிரியர்கள் பெண்களாக இருப்பதும், அவர்கள், தங்களது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை பணிக்கனுப்புதல், குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்புதல் போன்ற இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.ஒரு குடும்பத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பள்ளித் தலைமையாசிரியர்களாக இருப்பின், அவர்களின் குடும்பம் அன்றாட நடைமுறை வாழ்நிலையில் பெருத்த இன்னல்களுக்கும், நடைமுறைச் சிக்கல்களுக்கும் உள்ளாகும் அபாயம் பயிற்சியினால் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான தலைமையாசிரியர்கள் பெண்களாக இருப்பதும், அவர்கள், தங்களது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை பணிக்கனுப்புதல், குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்புதல் போன்ற இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.ஒரு குடும்பத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பள்ளித் தலைமையாசிரியர்களாக இருப்பின், அவர்களின் குடும்பம் அன்றாட நடைமுறை வாழ்நிலையில் பெருத்த இன்னல்களுக்கும், நடைமுறைச் சிக்கல்களுக்கும் உள்ளாகும் அபாயம் பயிற்சியினால் ஏற்பட்டுள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்களின்
குடும்பச் சூழ்நிலை, குழந்தை பராமரிப்பு போன்ற வேண்டுகோளை ஏற்று, உண்டு
உறைவிடப்பயிற்சியை ரத்து செய்து, தற்போது நடைமுறையில் உள்ளதுபோல், 9.30 முதல், 4.30
மணி வரையிலான கால அட்டவணையைக் கொண்டு அந்தந்த வட்டார வளமையத்தில் பணியடைப் பயிற்சி
வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)