Showing posts with label CPS. Show all posts
Showing posts with label CPS. Show all posts
Sunday, 22 September 2013
Sunday, 31 March 2013
தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?
தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலி
பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம்
செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் முதல் நான்காயிரத்து ஐநூறு
ரூபாய் வரை தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 01.06.2006 முதல் பணி
நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
ஆனால் தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக கணக்கீடு செய்ய பல முறை கோரிக்கை
வைத்தும், போராடியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதேபோல்
தொகுப்பூதியத்தில் 1990 முதல் 1992 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு
பணிப்பலனோடு பணப்பலனும் அளிக்கப்பட்டது. "எங்களுக்கு பணப்பயன் தேவையில்லை
குறைந்தபட்சம் பணிப்பயனை அளித்தால் போதும்" என்றும், இவ்வாறு அளிக்காமல்
போனால், தேர்வு நிலை மற்றும் பணி
மூப்பு பாதிக்கப்படும் எனவும் தெரிவிகின்றனர்.
மேலும் புதிய
பென்சன் திட்டத்தில் இவர்களை இணைத்து மாதம் தோறும் ஒரு கணிசமான தொகையும்
கடந்த பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பென்சன் திட்டத்தில்
வசூலிக்கப்படும் பணம் எந்த கணக்கில் உள்ளது என்பது இடைநிலை, பட்டதாரி,
முதுநிலை ஆசிரியர்களுக்கே தெரியாதநிலை தொடர்கிறது.
எனவே புதிய பென்சன்
திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த
வேண்டும். தேர்வு நிலை பெறவும், பணி மூப்பு பாதிக்காமல் இருக்கவும்
தொகுப்பு ஊதியத்தில் பணி செய்த மூன்றாண்டு காலத்தை பணிகாலமாக அறிவிக்க
வேண்டும்.
மேலும் பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஜிபிஎப் கடன்
இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டுமென காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Friday, 29 March 2013
ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ? - விழிப்புணர்வு கருத்தரங்கு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற்றன.
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் சம்பளம் ஓய்வூதியத்திற்காக பிடிக்கப்படுகிறது... நினைவில் கொள்வோம்!... விழிப்புணர்வு பெறுவோம்!...
Wednesday, 13 March 2013
புதிய ஓய்வூதிய திட்டத்தில் 47 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை
புதிய ஓய்வூதிய திட்டத்தில்
தொடக்கக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த 47 ஆசிரியர்களுக்கு
இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. 2003 ஏப்.1க்கு பிறகு பணியில்
சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்
அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலை படியில் 10 சதவீ தம் பங்களிப்பு
தொகையாக பிடித்தம் செய்யப்படும். அத்துடன் அரசும் தங்களுடைய பங்களிப்பாக
அதே தொகையை கொடுத்துவிடும்.
அரசு ஊழியர்கள், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சேம நல நிதி, பங்களிப்பு தொகை ஆகியவை பொது கணக்குத்துறை மூலம் பிடித்தம் செய்யப்பட்டு, கணக்கு பராமரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் சேமநலநிதி, பங்களிப்பு தொகை ஆகியவை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூலம் பிடிக்கப் பட்டு, சென்னை யில் உள்ள புள்ளியியல் மையத்தில் கணக்கு பராமரிக்கப்படுகிறது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், கருவூலங்களிலிருந்து பிடித்தம் தொடர்பாக முறையான தகவல்கள் செல்லாததால் புள்ளியியல் மையத்தில் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களு க்கு சேமநல நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவரம் 2006-07க்கு பிறகு கொடுக்கப்படவில்லை.
அதேபோல் பங்களிப்பு திட்டத்திலும் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவ ரம் இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட த்தில் சேர்ந்த தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 36 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர் களது பிடித்தம் தொடர்பான விவரம் இல்லாததால் இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டு வருகின்றனர். ஆனால் இது வரை எந்தவித பதிலும் தெடக்கக்கல்வித்துறையால் அளிக்க முடியவில்லை.
Subscribe to:
Posts (Atom)