மாண்புமிகு
முதல்வர் அவர்கள் இந்த பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளில் ஏன்
மௌனம் சாதிக்கிறார் என்பது புரியதா புதிராக உள்ளது. தனது தேர்தல்
அறிக்கையில் அவர் உச்சரித்த வார்த்தைகளை கேட்ட எம் இனம் கொண்டாடிய
மகிழ்விற்கு அளவே இல்லை. நான் முதலமைச்சர் ஆனால் 6வது ஊதியக்குழுவின்
குறைபாடுகளை களைய இயக்க பொறுப்பாளர்களை அழைத்து பேசுவேன் என்றும் தன்
பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிடுவேன் என்றும் அவர் உச்சரித்த
வார்த்தைகள் காட்டு தீயாய் தமிழகம் முழுமையும் பரவியது. அனைத்து அரசு
ஊழியர் இல்லங்களிலும் விழாக் கோலம் பூண்டது. அதன் எதிரொலிதான் கடந்த
சட்டமன்ற தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தபால் ஓட்டு
அ.இ.அ.தி.மு.கவிற்கு எகிறயது என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் பின் அமோக
வெற்றியடைந்து முதல்வரான பின்பு இந்த உறுதி மொழி குறித்து எவ்வித
நடவடிக்கையும் இல்லாதது எங்களைப் போன்ற இடைநிலை ஆசிரியர்களின் மனதை மிகவும்
வருத்துகிறது. இத்தகவல் முதல்வருக்கு தெரியாது என்று சொன்னால் சிறு பிள்ளை
கூட நம்பாது. ஒரு வேளை முதல்வர் கவனத்துக்கு செல்லாமல் தடுக்கும்
தீய சக்தி எது? ஆராய வேண்டாமா? எத்தனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்,
இறுதியில் மாவட்ட நிர்வாகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மறியல். மற்ற தோழமை
இயக்கங்களும் தனிச்சங்க நடவடிக்கைகள என தொடர் கதையாய் தொடர்ந்தும் முதல்வர்
மௌனம் சாதிப்பது எங்களை நம்ப வைத்து பலிகடவாக்கியது போல் உள்ளது.
உளவுத்துறை நண்பர்கள் இவ்விசயத்தை முதல்வரிடம் கொண்டுபோக வேண்டும்.
ஜனநாயக நாட்டில் உரிமைக்காக
போராடுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. எனவே மதிப்புமிகு முதல்வர் அவர்கள்
இயக்க பொறுப்பாளர்களை அழைத்து அந்த பதட்டம் மிகுந்த செயலுக்கு தீர்வு காண
வேண்டும். அப்படி செய்ய முன் வந்தால் அவரது புகழை வரலாறு உள்ள வரை பேசும்.
சிந்திப்பாரா முதல்வர்?
No comments:
Post a Comment