Sunday, 31 March 2013
Friday, 29 March 2013
ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ? - விழிப்புணர்வு கருத்தரங்கு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற்றன.
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் சம்பளம் ஓய்வூதியத்திற்காக பிடிக்கப்படுகிறது... நினைவில் கொள்வோம்!... விழிப்புணர்வு பெறுவோம்!...
தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
தேனியைச் சேர்ந்த ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.
ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது.
கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்யக் கூடாது என, எனக்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள், ஏற்கனவே ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
தேனி முதன்மைக் கல்வி அலுவலர், 2010 ஆக., 27ல், எனக்கு அளித்த நியமன உத்தரவில், டி.இ.டி., தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கவில்லை. என்னை பணி நீக்கம் செய்வதற்கு தடை விதித்து, டி.இ.டி., தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதி டி.அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். நீதிபதி, "மனுதாரரை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.
Monday, 25 March 2013
தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள் முதலே முன்னுரிமை வைக்கப்படுவதால் அடுத்த TET மூலம் அடுத்த பட்டதாரி நியமிக்கப்படும் முன் ஈர்க்கப்பட்டால் சற்று முன்னுரிமை கிடைக்கும் மேலும் முதுகலை ஆசிரியராக பதவியுயர்வு பெற வாய்ப்பு என்று கிட்டும் எதிர்பார்கின்றனர்.
இது
குறித்து பேசிய ஒரு பட்டதாரி ஆசிரியர் " வட்டார வள மையங்களில்
நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுனர்களுக்கு எப்படி முறையாக ஒவ்வொரு ஆண்டும்
முன்னுரிமைப்படி பள்ளிக்கல்வித்துறைக்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறதோ அதே
போல் எங்களுக்கும் அளித்தால் அது பலருக்கு வாய்ப்பாக அமையும் " என்றார் .
எனவே தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு
அலகு மாறுதல் இந்த வருடம் நடக்கும் பட்சத்தில் பல பட்டதாரி ஆசிரியர்கள்
பள்ளிக்கல்வித்துறை செல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் உயர்கல்வி பயின்று
பணிபுரிந்து கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி
ஆசிரியராக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் எனவும் தொடக்க கல்வி துறையில்
பணிபுரிந்நது கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும்
ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக
பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க
இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர்
உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றிய / நாகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் ஒன்றிய வாரியான எண்ணிக்கை விவரங்களை உரிய படிவங்களில் 26.03.2013 தேதியன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அளித்திட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களில் தீர்ப்பாணையின் நகலினையும் கொண்டு வர அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Saturday, 23 March 2013
Thursday, 21 March 2013
Wednesday, 20 March 2013
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
தலைவர் சுபாஷ் சாஸ்திரி இது தொடர்பாக கூறுகையில் DA 50% மேல் சென்றுவிட்டதால் ஏழாவது ஊதியகுழுவை அமைப்பதில் காலம் தாழ்த்தக்கூடாது மேலும் அடிப்படை சம்பளத்தில் 50% DA வை இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார் .
மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு, அரசால்,15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முதல், செயல்படுத்தப்பட்ட, இந்த திட்டம், தாமதமாக துவங்கியதால், இந்த கல்வியாண்டு முடியும் நிலையிலும், பல பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளன. எனவே, வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் போதே, அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, விலையில்லா பொருட்கள் பெறும் மாணவர்கள் குறித்து, பட்டியல் அனுப்பும்படி, பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பட்டியல்படி, பள்ளி திறப்பதற்கு, 10 நாட்களுக்கு முன், அனைத்து பொருட்களும், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அவை பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Monday, 18 March 2013
600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை உடனடியாக இரண்டாக பிரிக்க வேண்டும் - தேர்வுத் துறை அவசர உத்தரவு
பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. மார்ச் 27ம் தேதியுடன் முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5769 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ மாண வியரும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 2020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களின் விடைத்தாள் கட்டுகள் தேர்வு துறை அறிவித்தபடி தபாலில் வருவது தாமதமாகியுள்ளது. குறிப்பாக சில மையங்களின் விடைத்தாள் கட்டுகள் தபால் நிலையங்களுக்கு இரவு நேரத்தில்தான் எடுத்து செல்கின்றனர். இதனால் அந்த கட்டுகள் தேர்வு துறைக்கு வந்து சேர்வதில் தாமதமாகி விடுகிறது.
இதையடுத்து 600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை உடனடியாக இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை நேற்று அவசர உத்தரவு போட்டுள்ளது. இன்றும் நாளையும் தேர்வு இல்லை என்பதால் இரண்டு நாளில் தேர்வு மையத்தை பிரித்து அந்த தகவல்களை மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய நிலைக்கு மாவ ட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு .
அவ்வாறு பணியாற்றும் அலுவலரின் பெயர், பணிபுரியும் ஒன்றியம், தற்போதைய ஒன்றியத்தில் சேர்ந்த தேதி, தலைமையாசிரியராக சேர்ந்த தேதி, முன்பு உதவித்தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றிய ஒன்றியம் மற்றும் ஓய்வு பெறும் தேதி போன்றவை கேட்கப்பட்டுள்ளது. மேற்காணும் தகவல்களை 22.03.2013க்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளி துவங்கும் முன்பாகவே ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு?
ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர்.
இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதனால், கலந்தாய்வு முடியும் வரை, ஆசிரியர்கள், கற்பித்தல் பணியில், ஈடுபாடு காட்டுவதில்லை. மாறாக, தாங்கள் விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் உத்தரவு வாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, பள்ளிகளுக்கும் செல்லாமல், மாறுதல் உத்தரவு வாங்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
படிப்பு பாதிப்பு: குறிப்பாக, ஆளுங்கட்சி பிரமுகர்களை சந்திப்பதற்காகவும், தங்கள் மாவட்ட அமைச்சரை சந்தித்து, பரிந்துரை கடிதங்களை பெறவும், சென்னைக்கு பறந்து வந்து விடுகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதை அறிந்த பள்ளிக் கல்வி இயக்குனரகம், கலந்தாய்வை, கோடை விடுமுறை காலமான மே மாதத்திலேயே, நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஆசிரியர் வகை வாரியாக, தனித்தனியாக, கலந்தாய்வு தேதி பட்டியலை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வை, காலம் தாழ்த்தி நடத்துவதில் ஏற்படும் பிரச்னைகளை, கல்வித்துறை உயர் அதிகாரிகளும், நன்கு உணர்ந்துள்ளதால், இயக்குனரகத்தின் திட்டத்திற்கு, ஒப்புதல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் முறை: மேலும், ஆன்-லைன் முறையில், அனைத்து ஆசிரியர்களுக்கும், கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அரசு அனுமதி அளித்ததும், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியாகும்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பள்ளி துவங்கிய பின், கலந்தாய்வை நடத்துவதால், மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்களுக்கும், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. தங்கள் பிள்ளைகளை, மாறுதலாகிச் செல்லும் இடங்களில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதில், கடுமையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது, முன்கூட்டியே, கலந்தாய்வை நடத்துவது என்பது வரவேற்கத்தக்கது. இதனால், மாறுதலாகிச் செல்லும் இடங்களில், தங்கள் பிள்ளைகளையும், முன்கூட்டியே பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளில், ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியும்.
காலியிட விவரங்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணையை, ஏப்ரல் இறுதியிலேயே வெளியிட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்கள், கோடை விடுமுறைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வர். கலந்தாய்வு அட்டவணையை, முன்கூட்டியே வெளியிட்டால், அதற்கேற்ப, அவர்கள், தங்கள் பயணத்தை, திட்டமிட முடியும். முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை, இந்த ஆண்டுடன் நிறுத்தி விடாமல், ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
பள்ளிகளில் மாணவிகள் நடனமாட தடைவிதித்த பஞ்சாயத்து
அரியானாவைச் சேர்ந்த, பஞ்சாயத்து அமைப்பு, தங்கள் பகுதிகளில் நடக்கும் பள்ளி விழாக்களில், மாணவியர் நடனமாடுவதற்கு தடை விதித்துள்ளது.
பெண் குழந்தைகளை நடனமாட வைப்பது, அவர்களின் வாழ்க்கையை தவறான பாதைக்கு திசை திருப்பி விடும் என, அந்த பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர். அரியானா மாநிலம், ஜாதி அமைப்புகளால் நடத்தப்படும், பஞ்சாயத்துக்களுக்கு பெயர் பெற்றது. இந்த ஜாதி பஞ்சாயத்து அமைப்புகள், காதல் திருமணங்களை கடுமையாக எதிர்க்கின்றன. தங்களின் உத்தரவை மீறி, கலப்பு திருமணம் செய்வோரை, கவுர கொலை செய்வதற்கும், இந்த அமைப்புகள் தயங்குவது இல்லை.
இந்த ஜாதி பஞ்சாயத்து அமைப்புகள், சட்டபூர்வமானவை அல்ல. ஆனால், சட்டபூர்வமாக, தேர்தல் மூலம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும், இது போன்ற தடாலடியான காரியங்களில் இறங்கி, அதிரடி உத்தரவை பிறப்பிக்க துவங்கியுள்ளன. அரியானா மாநிலத்தில் உள்ள, கினானா என்ற கிராம பஞ்சாயத்து கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பஞ்சாயத்து நிர்வாகி, ராஜாராம் கூறியதாவது: பள்ளிகளில், கலாசார விழாக்கள் என்ற பெயரில், நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவற்றில், பெண் குழந்தைகளையும், நடனமாட வைக்கின்றனர்.
இது, தவறான அணுகுமுறை. பெண் குழந்தைகளை நடனமாட வைப்பது, அவர்களின் வாழ்க்கையை, தவறான பாதைக்கு திசை திருப்பி விடும். இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளை பார்ப்போரை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட வைப்பதற்கும், இது முக்கிய காரணமாக உள்ளது. இளைஞர்களின் மனதில், தவறான கருத்துகளை பதிய வைப்பதற்கு, இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் காரணமாக இருக்கின்றன.
பெண் குழந்தைகளை, கல்வி பயில்வதற்காக தான், பள்ளிக்கு அனுப்புகிறமே தவிர, கலாசார விழாக்கள் என்ற பெயரில், நடனமாட வைப்பதற்கு அல்ல. இது தொடர்பாக, எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, அனைத்து பள்ளிகளுக்கும், கடிதங்கள் எழுதியுள்ளோம்.இவ்வாறு, ராஜாராம் கூறினார். இது குறித்து, ரோகத் மாவட்ட கல்வி அதிகாரி, வந்தனா கூறுகையில், இது தொடர்பாக, எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. புகார் தெரிவிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்போம், என்றார்.
சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்
சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.
பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - மல்லிகா தம்பதியர். இவர்களின் ஒரே மகன் சங்கர் சுப்ரமணியம், 26. பிறவியிலேயே 90 சதவீத பார்வை குறைபாடு உடையவர்; இரண்டு கால்களுக்கும் வளர்ச்சியில்லாமல், நடக்க முடியாது. பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது.
பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாகத்தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; எந்த விஷயத்தையும் எளிதில் மறந்துவிடாத, நுட்பமான ஞாபக சக்தி உண்டு.
அதைவிட மேலாக, சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதி மனதில் உண்டு. இதுவே, சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றி வருகிறது. முழுமையாக பார்வை குறைபாடு இருப்போர், "பிரெய்லி" முறையில் படிக்க முடியும்; ஆனால், சங்கர் சுப்ரமணியத்துக்கு 10 சதவீத பார்வை இருக்கிறது; எனினும், பாட புத்தகங்களை படிக்க முடியாது; பிறரை வாசிக்கச் சொல்லி தான், இவரால் படிக்க முடியும். பாடங்களை மனம் பாடம் செய்து, "ஸ்கிரைப்" ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதி வருகிறார்.
கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் 62 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். பாட புத்தகத்தை புரட்டாமல், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தந்த பாடங்களை மனதில் பதிய வைத்தே, இவர் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார். தற்போது, சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில், முதல் ரேங்க் வாங்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலையில் நடந்த விழாவில், கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்கி, சாதனை மாணவர் சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார்.
இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் அருகேயுள்ள காற்றாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். தாய், தந்தையின் தளராத ஊக்கமும், அரவணைப்பும், சிறப்பாசிரியர்களின் பயிற்சியும் சங்கர்சுப்ரமணியத்தை, படிப்பின் சாதனை படிகளில் ஏற வைத்துள்ளது. "பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதே, எனது அடுத்த லட்சியம்,&'&' என்கிறார், சங்கர் சுப்ரமணியம்.
அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மல்லிகா கூறியதாவது: பிறவியிலேயே கால்கள் ஊனம், கண் பார்வை குறைவுடன் பிறந்ததால், குழந்தையை வளர்ப்பதும், படிக்க வைப்பதும் சிரமம் என கருதினோம். எனினும், அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தோம். இன்று, அந்த குழந்தை சாதனை இளைஞனாக மாறி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளான்.
முதலில், பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம்; பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். அங்குள்ள ஆசிரியர்களின் ஊக்குவிப்பு, சிறப்பு ஆசிரியர்கள் ரகுபதி ஐயர், பத்மநாபன் ஆகியோரின் பயிற்சி ஆகியவை, எங்கள் மகனின் திறமையை வெளியே கொண்டு வர மிகவும் உதவியது.
சங்கர் சுப்ரமணியத்துக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. கோவை அரசு இசைக்கல்லூரியில் குரலிசை பிரிவில் படிக்க "அட்மிஷன்" கிடைத்தது. பார்வை குறைபாடு மற்றும் கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, வாரம் இரு முறை மட்டும் வகுப்புக்கு வர தனிப்பட்ட சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பேட்டையில் இருந்து கோவைக்கு காரில் வர வேண்டும் என்றால், தினமும் 1,000 ரூபாய் செலவாகும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வேலை அளித்து உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Sunday, 17 March 2013
அறிவிப்பு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்ரல் 7ந்தேதி நடைபெற இருந்த மாநில மாநாடு தவிர்க்க இயலாத காரணத்தால் வருகிற ஏப்ரல் 10ந் தேதி சென்னையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்கள். அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
6 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் முழு ஆண்டு தேர்வு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேர்வு தொடங்கி முடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தனியார் பள்ளிகள் அவரவர் இஷ்டத்துக்கு வெவ்வேறு நாட்களில் தேர்வுகளை நடத்தி வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.
இதனால் தமிழகம் முழுவதும் எல்லா பள்ளியிலும் ஒரே நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுதுகிறார்கள். கோடை விடுமுறையும் அதற்கேற்றவாறு விடப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்குவது வழக்கம்.
தற்போது பிளஸ்-2 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது.
6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி முடிவடைகிறது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கிறது.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு 3-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி முடிகிறது. மதியம் 1.30 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிகிறது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளும் இந்த தேர்வு அட்டவணையை பின்பற்றித் தான் தேர்வை நடத்த வேண்டும்.
தேர்வுக்கான வினாத்தாள் தனியார் பள்ளிகள் அவர்களே தயாரித்துக் கொள்ளலாம் எனவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வினாத்தாள்களை விரும்பும் தனியார் பள்ளிகள் வேண்டுமானால் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
Friday, 15 March 2013
TNPTF 6 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
6 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
Wednesday, 13 March 2013
புதிய ஓய்வூதிய திட்டத்தில் 47 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை
புதிய ஓய்வூதிய திட்டத்தில்
தொடக்கக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த 47 ஆசிரியர்களுக்கு
இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. 2003 ஏப்.1க்கு பிறகு பணியில்
சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்
அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலை படியில் 10 சதவீ தம் பங்களிப்பு
தொகையாக பிடித்தம் செய்யப்படும். அத்துடன் அரசும் தங்களுடைய பங்களிப்பாக
அதே தொகையை கொடுத்துவிடும்.
அரசு ஊழியர்கள், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சேம நல நிதி, பங்களிப்பு தொகை ஆகியவை பொது கணக்குத்துறை மூலம் பிடித்தம் செய்யப்பட்டு, கணக்கு பராமரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் சேமநலநிதி, பங்களிப்பு தொகை ஆகியவை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூலம் பிடிக்கப் பட்டு, சென்னை யில் உள்ள புள்ளியியல் மையத்தில் கணக்கு பராமரிக்கப்படுகிறது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், கருவூலங்களிலிருந்து பிடித்தம் தொடர்பாக முறையான தகவல்கள் செல்லாததால் புள்ளியியல் மையத்தில் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களு க்கு சேமநல நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவரம் 2006-07க்கு பிறகு கொடுக்கப்படவில்லை.
அதேபோல் பங்களிப்பு திட்டத்திலும் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவ ரம் இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட த்தில் சேர்ந்த தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 36 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர் களது பிடித்தம் தொடர்பான விவரம் இல்லாததால் இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டு வருகின்றனர். ஆனால் இது வரை எந்தவித பதிலும் தெடக்கக்கல்வித்துறையால் அளிக்க முடியவில்லை.
Subscribe to:
Posts (Atom)